மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அமைச்சர் ரகுபதி தொடக்கி வைப்பு

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை சட்டத்துறை  அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

Update: 2023-12-28 12:23 GMT

முகாமில் பங்கேற்ற அமைச்சர்

அரிமழத்தில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் சட்ட  அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை வகித்தார்.

மாநில சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பேருராட்சி தலைவர் மாரிக்கண்னு முத்துக்குமார் வரவேற்று பேசினார். ஒன்றிய சேர்மன் மேகலாமுத்து, முன்னாள் சேர்மன் பொன்.ராமலிங்கம், கோட்டாட்சியர் முருகேசன், உதவி ஆணையர் (கலால் ) எம்.மாரி, வட்டாட்சியர் புவியரசன், வருவாய் ஆய்வாளர் சங்கமித்திரன், கிராம நிர்வாக அலுவலர் கணேசன், ஆசிரியர் முத்து,

சத்திரம் சி.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்கள் 200க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர்.அனைத்து துறை அலுவலர்களும் வந்திருந்தனர். நிறைவாக பேருராட்சி செயல் அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News