அனந்தபுரம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்.

அனந்தபுரம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-12-19 09:55 GMT
அனந்தபுரம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அனந்தபுரம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

பேரூராட்சி மன்ற தலைவர் முருகன் வரவேற்றார். செஞ்சி ஒன்றியக்குழுதலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அதி காரி(தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு) சரஸ்வதி மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்.

முகாமில் எரிசக்தி மற்றும் தமிழ்நாடு மின்சார துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பட்டாமாற்றம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கணினி மூலம் பதிவேற் றம் செய்தனர்.

நிகழ்ச்சியில் துணை கலெக்டர்(தாட்கோ) தமிழரசன், தாசில்தார் ஏழுமலை, பேரூராட்சி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News