தர்மபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள்
தர்மபுரி மாவட்டத்தில் 'மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெறும் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் 'மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெறும் சிறப்பு முகாம்கள், தர்மபுரி நகராட்சி மற்றும் பத்து பேரூராட்சிகளில் (18ம்தேதி) முதல் வரும் 27ம்தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 'மக்களுடன் முதல்வர் திட்டத்தில், பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று, 30 தினங்களுக்குள் தீர்வு காண, முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளான தர்மபுரி நகராட்சி மற்றும் பத்து பேரூராட்சிகளில் (18ம்தேதி) முதல் வரும் 27ம்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கும் முகாமில் இலவச வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான மனுக்கள் தவிர்த்து, 13 துறைகள் மின்சார துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிதுறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை,
ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை தொடர்பான மனுக்களை,பொதுமக்கள் வழங்கி தீர்வு பெறலாம். கிராம பகுதிகளுக்கு தனி முகாம் பின்னர் நடத்தப்படும். (18ம் தேதி) தர்மபுரி நகராட்சி வார்டு 1,2,3,4,5,6 ஆகியவற்றுக்கு மதிகோண்பாளையம் (கே.பி.ஜே )திருமண மண்டபத்திலும், பென்னாகரம் பேரூராட்சிக்கு பஸ்நிலையம் அருகே உள்ள சமுதாய கூடத்தில் பாலக்கோடு பேரூராட்சி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியிலும், 19-ம்தேதி தர்மபுரி நகராட்சி வார்டு 7,8,9,17,18,19 ஆகியவற்றுக்கு கடைவீதியில் உள்ள அபிராமி மஹாலிலும் நடக்கின்றது. மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு ஆனந்த மஹாலில் நடக்கிறது. அதேபோல், 20ம் தேதி தர்மபுரி நகராட்சி வார்டு 10,11,12,13,14,15,16 ஆகியவற்றுக்கு வன்னியர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு அங்குள்ள சமுதாய கூடத்தில் நடக்கிறது. வரும் 21ம் தேதி தர்மபுரி நகராட்சி வார்டு 20,21,22,23,24,25,26 ஆகியவற்றிக்கு எஸ்வி ரோடு வர்த்த மகாலில் முகாம் நடக்கிறது. காரிமங்கலம் பேரூராட்சிக்கு துளசியம்மாள் திருமண மண்டபத்திலும், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிக்கு மல்லிகா பேலஸ், அரூர் பேரூராட்சிக்கு பொன்கற்பகம்.திருமணமண்டபத்திலும் நடக்கிறது. 22ம் தேதி தர்மபுரி நகராட்சி வார்டு 27,28,29 ஆகியவற்றுக்கு, தர்மபுரி நெசவாளர் காலனி செங்குந்தர் திருமண மண்டபத்திலும், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு செங்குந்தர் மண்டபத்திலும், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு சமுதாய கூடதிலும் முகாம் நடக்கிறது. அதே போல், 26ம்தேதி தர்மபுரி நகராட்சி வார்டு 30, 31 ஆகியவற்றுக்கு சாலை விநாயகர் ரோட்டில் உள்ள பிபிசி திருமண மண்டபத்திலும், 27ம்தேதி தர்மபுரி நகராட்சி வார்டு 32, 33 ஆகியவற்றுக்கு அன்னசாகரம் செங்குந்தர் திருமணமண்டபத்திலும், கடத்தூர் பேரூராட்சிக்கு கடத்தூர் மீனாட்சி மகால் மண்டபத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.