மதுரையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

மதுரையில் டிச.,18 முதல் ஜன., 6 வரை மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடக்கவுள்ளதாக கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

Update: 2023-12-14 16:05 GMT

மதுரையில் டிச.,18 முதல் ஜன., 6 வரை மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடக்கவுள்ளதாக கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வருகின்ற 18.12.2023 முதல் 06.012024 வரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தகவல்!

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக அரசு சேவை என்ற நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், நடத்தப்படும் முகாமில் பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை காவல்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெற்றிடும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் கலந்து கொண்டு புதிய மின்இணைப்பு. மின் வீதப்பட்டியல் மாற்றம். பெயர்மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர் கழிவுநீர் இணைப்புகள், சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை பட்டா மாறுதல். உட்பிரிவு நிலஅளவை இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக வருகின்ற 18.12.2023 முதல் 06.012024 வரை காலை1 0.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள், 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி எல்லைப் பகுதியையொட்டியுள்ள 24 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேலும் இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் உஊஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News