முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்; ஜல்லிக்கட்டு போட்டி

ராசிபுரம் அருகே முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-03-01 14:08 GMT

நாமகிரிப்பேட்டை திமுக ஒன்றிய ஒன்றிய செயலாளர் கே பி இராமசாமி தலைமையில் , பேரூர் கழக நிர்வாகிகள் இணைந்து நடத்தும் தமிழக முதல்வரின் 71-வது பிறந்தநாள் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தாண்டான் கவுண்டன்பாளையம் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டும் தமிழக முதல்வர் அவர்களின் எழுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் ஜல்லிக்கட்டு வீரர்களுடன் நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கே. பி .இராமசாமி உறுதிமொழி ஏற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் பாரம்பரியமாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்த நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து ராசிபுரம் தாண்டான்கவுண்டன்பாளையம் பகுதியில் பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டமிட்டு வாடிவாசல், பார்வையாளர்கள் அரங்கம், விஐபி கேலரி, பரிசு பொருள் மாடம் என பல்வேறு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏற்பாடுகளை அதிகாரிகளுடன் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் எஸ்.உமா ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினார் . காலை 8 மணிக்கு மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை எடுத்துப் பிறகு வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக சீறிப்பாயத் தொடங்கிய நிலையில் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை உற்சாகமாக பார்த்து ரசித்தார்.

காளைகள் சீரிப்பாய தொடங்கிய முதலே வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கி பரிசு பொருட்களை தொடர்ந்து பெற்று சென்றுனர். இந்நிகழ்ச்சியில் நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கே பி இராமசாமி,பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள், இராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் என பலர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தனர்.. ஜல்லிக்கட்டு போட்டியில் களம் காணும் காளைகளுக்கு, வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை பணியில் 7 மருத்துவக் குழுக்கள், 10 மருத்துவர்கள் உட்பட சுமார் 50 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உடற்தகுதி உள்ள காளைகளும் ,வீரர்களும் போட்டியில் களம் இறக்கப்பட்டனர்.

தொடர்ந்து வெற்றி பெற்ற காளைகளுக்கும் வீரர்களுக்கும் தங்கம்,வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்சி கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுகின்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், காவல்துறையினர் என 200-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News