மக்களுடன் முதல்வர் திட்டம் - நகராட்சி, பேரூராட்சிகளில் சிறப்பு முகாம்

Update: 2023-12-06 10:36 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் நகராட்சி மற்றும் பூலாம்பாடி, அரும்பாவூர், லெப்பைக்குடிக்காடு மற்றும் குரும்பலூர் பேரூராட்சிகளில் “மக்களுடன் முதல்வர்“ திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி பெரம்பலூர் நகராட்சியில் உள்ள வார்டு எண்கள் 1, 2, 3, 4, 12 மற்றும் 13 இல் குடியிருக்கும் பொதுமக்கள் டிசம்பர் 11. ம் தேதி அன்று வடக்கு மாதவி ரோட்டில் அமைந்துள்ள NSK மஹாலிலும், வார்டு எண்கள். 7, 8, 9, 10, 11 மற்றும் 21 இல் குடியிருக்கும் பொதுமக்கள் டிசம்பர் 12. ம் தேதி அன்று துறைமங்கலம் J.K. மஹாலிலும், வார்டு எண்கள். 5, 6, 18, 19, மற்றும் 20இல் குடியிருக்கும் பொதுமக்கள் டிசம்பர் 13. ம் தேதி அன்று சங்குப்பேட்டை அருகில் உள்ள முத்துக்கோனார் திருமண மண்டபத்திலும் மற்றும் வார்டு எண்கள். 14, 15, 16, மற்றும் 17இல் குடியிருக்கும் பொதுமக்கள் டிசம்பர் 14ம் தேதி அன்று துறையூர் ரோடு, அருகில் உள்ள முத்துக்கிருஷ்ணா மக்கள் மன்றத்திலும் நடைபெறுகிறது.குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நான்கு கட்டமாக நடைபெறவுள்ளதால், தங்கள் பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் இச்சிறப்பு முகாமில் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான, பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் டிசம்பர் 15. ம் தேதி அன்று பூலாம்பாடி, சீனிவாச பெருமாள்கோவில் தெருவில் உள்ள ரெட்டியார் திருமணமண்டபத்திலும், அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் டிசம்பர் 16. ம் தேதி அன்று அரும்பாவூர், கடைவீதியில் உள்ள ரெட்டியார் திருமண மண்டபத்திலும், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட பொது மக்கள் டிசம்பர் -19ம் தேதி அன்று லெப்பைக்குடிக்காடு, மெயின்ரோடு, கிழக்கு பள்ளிவாசல் மஹாலிலும், மற்றும் குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் டிசம்பர் 21ம் தேதி அன்று குரும்பலூர், மெயின்ரோடு, ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் இச்சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம். எனவே, பெரம்பலூர் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள பொதுமக்கள் முகாம் நடைபெறும் தேதியன்று தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News