மக்களுடன் முதல்வர்” சிறப்புத் திட்ட முகாம்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடைய ”மக்களுடன் முதல்வர்” சிறப்புத் திட்ட முகாம்

Update: 2023-12-17 14:35 GMT

நாமக்கல் மாவட்டம் முழுவதும் அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடைய ”மக்களுடன் முதல்வர்” சிறப்புத் திட்ட முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ”மக்களுடன் முதல்வர்” சிறப்புத்திட்டமுகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.முகாமில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும், அரசின் சேவைகளை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்லவும் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை வரும் டிசம்பர் 18 ம் தேதி கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் பின்வரும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பின்வரும் நாட்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 18.12.2023 அன்று நாமக்கல் துறையூர் ரோடு, நகராட்சி திருமண மண்டபம், ராசிபுரம் அண்ணாசாலை குமரவேல் திருமண மண்டபம், திருச்செங்கோடு அம்மணியம்மாள் திருமண மண்டபம், சீராப்பள்ளி பேரூராட்சி சௌடேஸ்வரி திருமண மண்டபம், 19.12.2023 அன்று பள்ளிபாளையம் ஜீ.வி.மஹால், குமாரபாளையம் பள்ளிபாளையம் ரோடு, ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக், எருமப்பட்டி அய்யா மஹால் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், , கே.ஆா்.என்.இராஜேஸ்குமார் எம்.பி, மாவட்ட ஆட்சியர் உமா, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் ஆகியோர் தலைமையில் பொதுமக்களின் குறைகள் தொடர்பாக மனுக்களை பெற உள்ளனா்.

Tags:    

Similar News