கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட முகாம்
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட முகாம்பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை பெ.சு. தி.சரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்து பேசியதாவது,
இந்த சிறப்பு மருத்துவ காப்பீடு திட்ட முகாமில் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயனடைய வேண்டும் அதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்காக மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தல ரூ 5 லட்சம் வழங்கி ,அதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் உடல்நலத்தை பரிசோதனை செய்து ,இந்த காப்பீடு கார்டு மூலம் இலவசமாக சிகிச்சை பெறலாம் .மேலும் இதற்கு முன்பு முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 2006 இல் தமிழக முதல்வராக இருந்தபோது தமிழக மக்கள் மருத்துவம் பார்ப்பதற்கு போதுமான நிதி வசதி இல்லாததால் மக்கள் சிகிச்சை பார்க்க வசதி இல்லாததால் சிரமம் அடைகிறார்கள்.
அதனால் 2006 இல் இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை உருவாக்கி அந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ 1 லட்சம் என வழங்கி ஒவ்வொரு குடும்பத்திலும் சிகிச்சை பார்ப்பதற்கு நிதி உதவி வழங்கி சிகிச்சை பார்த்து உடல் நலத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் முழுமையாக சிகிச்சை பெற வேண்டும் அதற்காக, ஒவ்வொரு மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கும் தல ரூ 5லட்சம் நிதி உதவி வழங்கி, அதன் மூலம் தமிழக மக்கள் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் வாழலாம் என்பதற்கு இந்த திட்டத்தை துவங்கி வைத்துள்ளார். மேலும் இந்த மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் இதற்கு முன்பு மருத்துவ காப்பீடு அட்டைவைத்திருப்பவர்கள் பதிவு செய்ய வேண்டாம்.
மருத்துவ காப்பீடு அட்டை இல்லாதவர்கள் இந்த திட்டத்தின் மூலம் சரியாக பதிவு செய்து பயன்பெறலாம் இந்த மருத்துவ காப்பீடு முகாம் இணையதளத்தில் - பதிவு செய்து தரப்படும் பின்னர் கிராம நிர்வாக அலுவலகத்தில் அந்த பதிவு செய்த மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்படும் என்றார் .மேலும் இந்த -மருத்துவ காப்பீடு அட்டை இல்லாமல் பல நபர்கள் தவிர்த்து வருகிறார்கள் ,அதனால் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் இந்த சிறப்பு மருத்துவ காப்பீடு திட்ட முகாம் நடைபெற வேண்டும் அதன் மூலம் மக்கள் முழுமையாக பயனடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் இந்த சிறப்புமுகாம் நடைபெற்று வருகிறது.
இந்த மருத்துவ காப்பீடு அட்டை மூலம் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை என அனைத்து மருத்துவமனையிலும் இந்த மருத்துவ காப்பீடு அட்டை முழுமையாக செல்லும் .இதன் மூலம் நீங்கள் முழுமையாக பயனடையலாம் என்றார். பின்னர் இந்த மருத்துவ காப்பீடு திட்ட மூலம் 4 கிராமங்களுக்கு ஒரு மையம் என துவங்க வேண்டி முதலமைச்சரிடமும், அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும், இந்த முகாமின் அலுவலர்களிடமும் கேட்டுள்ளேன் அதன் மூலம் நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு விரைவில் இந்த 4 கிராமங்களுக்கு ஒரு இடத்தில் முகாமை விரைவில் துவங்கி வைக்கிறோம் என்று கூறினர். அப்படி தொடங்கினால் அனைத்து மக்களும் இந்த திட்டத்தின் மூலம் முழுமையாக பயனடையலாம். மேலும் தமிழக மக்களுக்காக இன்னும் பல நல்ல திட்டங்களும் பல நலத்திட்ட உதவிகளும் தமிழக மக்களுக்காக முதல்வர், அமைச்சர், நானும் வழங்கி வருகிறோம் என்று பெ.சு. தி.சரவணன், எம்எல்ஏ கூறி மருத்துவ காப்பீடு காடு சிறப்பு திட்ட முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அ.சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் க.சுப்பிரமணியம், தமிழ்நாடு சுகாதார திட்ட அலுவலர் சகானா, மாவட்ட திட்ட அலுவலர் ஞானம், தாசில்தார் ராஜராஜேஸ்வரி, நகர செயலாளர் சௌந்தர்ராஜன், கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரமேஷ். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ். மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் துணை அமைப்பாளர் அன்பரசு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நவீன்குமார். ஒன்றிய கவுன்சிலர்கள் பிச்சாண்டி, லட்சுமி பன்னீர்செல்வம், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.