முதல்வர் உத்தரவு: செயல்படுத்திய மேயர் ஜெகன் பெரியசாமி

Update: 2023-10-30 13:03 GMT

கூட்டத்தில் பங்கேற்ற மேயர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக முதல்வர் தூத்துக்குடி வந்தபோது அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க கோரி உத்தரவிட்டார். அதன்படி தற்போது 100 சதவீதம் பணிகள் முடிவுற்றது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசியதாவது "தூத்துக்குடி மாநகரத்தில் கடந்த ஓராண்டுகளாக பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றி உள்ளோம். குறிப்பாக 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 120 கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது. பயணிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தூத்துக்குடி வந்தபோது அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க கோரி உத்தரவிட்டார்.

அதன்படி தற்போது 100 சதவீதம் வேலைகள் முடிவுற்றது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்த அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது தூத்துக்குடி நகரம் முழுவதும் ரோடுகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குறுகிய ரோடுகள் அனைத்தும் 40 அடி ரோடாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் வியாபாரிகள் தங்களது கடை முன்பு ஒரு பகுதியாக இருசக்கர வாகனத்தை நிறுத்த வலியுறுத்த வேண்டும். தற்போது மழை காலம் தொடங்கி விட்டதால் மழை நீர் சீராக செல்வதற்கு பக்கிள் ஓடையில் கழிவு நீர் சீராக செல்வதற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டு கொண்டார்.

கூட்டத்தில் கவுன்சிலர் மும்தாஜ் பேசும்போது, எனது 38 வார்டில் வீட்டுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு ரூபாய் 300 முதல் 400 வரை பணம் கேட்கிறார்கள். ஜெயலானி தெரு பகுதியில் ஒரு சில இடங்களில் குடிநீர் சரியாக வரவில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ் தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், பணிகள் குழு தலைவர் கீதா முருகேசன், அப்பாயின்மென்ட் குழு தலைவர் சந்திரபோஸ், கல்வி குழு தலைவர் அதிர்ஷ்ட மணி ரவீந்திரன், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, திலகராஜ், நிர்மல் ராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, துணை ஆணையர் ராஜாராம், பொறியாளர் பாஸ்கரன், துணை பொறியாளர் சரவணன், மாநகர் நல அலுவலர் சுமதி, மாநகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன், பாலா,

மண்டல ஆணையர்கள் சேகர், ராமச்சந்திரன், சந்திரமோகன், தனசிங், சுகாதார அலுவலர்கள் ராஜசேகர், ஸ்டாலின், திமுக மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் ரெங்கசாமி, முத்துவேல், அந்தோணி பிரகாஷ், மெடின்டா டேனியல், ரெக்சிலின், ஜாக்லின் ஜெயா, சரண்யா, காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் எடிண்டா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News