குத்தாலம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
மயிலாடுதுறை குத்தாலம் பேரூராட்சியில் “மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமில் 650 பேர் மனுக்களை அளித்தனர்;
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 16:04 GMT
மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் 8வார்டுகளுக்காக மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் அம்ரா மகால் திருமணமண்டபத்தில், காலை 10 மணிக்கு துவங்கியது, பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், தலைவர் சங்கீதாமாரியப்பன் கலந்துகொண்டனர்.
13 அரசு துறைகளைச் சேர்ந்தவர்கள் வந்திருந்ததால், பொதுமக்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். 650 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொண்டதால் மாலைவரை மனுக்கள் வாங்குவது நீடிக்கப்பட்டது.