முதல்வர் வருகை : அமைச்சர் ஆய்வு
தருமபுரியில் முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ள அரசு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடத்தில் வேளாண்மை துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-09 11:02 GMT
அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 11ம்தேதி தர்மபுரியில் நடைபெற இருக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார், இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
விழா ஏற்பாட்டு பணிகளை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அவர்கள் இன்று நேரில் பாவையிட்டு ஆய்வு மேற்கொண்டார், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். தர்மபுரிக்கு வருகை தரவிருக்கும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.