மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு

சென்னை மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-26 09:12 GMT

தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் நோக்கில் சென்னை மனகராட்சிக்குட்பட்ட கால்வாய்கள் நீர்நிலைகள் மற்றும் மழை நீர் வடிகால்களை தூர்வாருதல், அகாயத்தாமரை அகற்றி தயார்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

தியாகராய நகர் டாக்டர் நாயர் சாலையில் நடைபெற்று வரும் மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்து செய்தார், உடன் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கும் போது திடீரென அதிக கனமழை இருக்கலாம் அந்த நேரத்தில் எங்கும் மழை நீ தேங்கி விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி மற்றும் நகர்புற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

 சென்னை மட்டுமில்லாமல் கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்களிலும் மழைநீர் வடிகால் பணிகள் முன்னெச்சரிக்கையாக மேற்கொண்டு வருகிறோம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், மட்டுமின்றி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் பேசி கவனமாக இருக்க அறிவுறுத்தி உள்ளோம்.

மேலும், காற்றுடன் அதிக மழை பெய்தால் மரம் வெட்டும் இயந்திரம் உள்ளிட்டவையும் தயாராக இருக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்று தெரிவித்தார். மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழையால் வடிகால் பணிகள் சிலவற்றை நிறுத்தி வைத்து இருந்தோம் ஜனவரி மாதத்திற்கு பிறகு மறுபடியும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னை மாநகராட்சி நீர்வளத்துறை நெடுஞ்சாலைத்துறை என அனைத்து துறைகளிலும் பணிகள் நடைபெற்ற வருகின்றன விரைவில் முடிக்கப்படும், செப்டம்பர் மாதத்திற்கு பணிகள் முடிக்க வேண்டும், அப்போதுதான் மழைக்காலங்களில் நமக்கு அது உதவும். ஒவ்வொரு வாரமும் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுகிறது தொடர்ந்து மாவட்ட வாரியாக மாதத்திற்கு ஒரு முறையும் கூட்டம் நடைபெற்று வருகிறது. மின்சாரத்துறை, குடிநீர் வாரியம், போக்குவரத்து துறை என அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து எங்கெங்கே என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பது குறித்து அனைத்தும் ஒருங்கிணைந்து தான் செயலாற்றி வருகிறோம்.

வடசென்னை பகுதியில் கொசஸ்தலை ஆறு மற்றும் தென் சென்னை பகுதியில் கோவளம் ஆறு பணிகளும் நடைபெற்று வருகின்றன நாம் கணித்த நேரத்தை விட முன்னதாகவே வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன, பருவமழைக்கும் பணிகள் முடிந்து விடும். 

  டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தெரிவித்து பிரச்சினைகள் இருந்தால் அதற்கு கணக்கெடுத்து தருமாறு அறிவுறுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News