சிறார் வதை ; தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;

Update: 2024-03-19 03:01 GMT

நீதிமன்றம் 

 திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் ராஜா தெருவை சேர்ந்தவர் ஜான் மேக்சின்(வயது 40). இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு மே 1ம் தேதி முதல் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து ஜான் மேக்சினை கைது செய்தனர்.

Advertisement

இதுதொடர்பான வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று(18-03-2024) நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஜாகிர் உசேன் வாதாடினார்.

Tags:    

Similar News