மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-05-20 09:23 GMT

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி 

விழுப்புரம் நகர பகுதியான விராட்டிக்குப்பம் சாலையிலுள்ள ராஜன் நகரில் பரந்தாமன் என்பவர் புதிய வீடு ஒன்றினை கட்டி வருகிறார். இவர் புதிய வீடுகளை கட்டி விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பரந்தாமன் ராஜன் நகரில் கட்டி வரும் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் சிவக்குமார் என்பவரின் மகன் கிருத்விக் மற்றும் அவரது தங்கச்சி மகன் கிஷோர் ராகவ் புதிய வீட்டில் ஏரி விளையாடி கொண்டிருந்துள்ளனர்.

Advertisement

அப்போது கிஷோரும் கிருத்விக் என்ற இரு சிறுவர்களும் அவ்வழியாக செல்லக்கூடிய மின்கம்பியை எதிர்பாராத விதமாக பிடித்துள்ளனர். இதில் மின்சாரம் தாக்கி கிஷோர் ராகவ் சம்பவ இடத்திலையே உடல் கருகி உயிரிழந்துள்ளார். கிருத்விக் மின்சாரம் தாக்கி வீட்டின் மாடி பகுதியிலிருந்து கிழே விழுந்துள்ளார்.

வீட்டின் அருகே சத்தம் கேட்டவுடன் வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது கிருத்விக் மின்சாரம் தாக்கியதாகவும் கிஷோர் மேலே இருப்பதாக கூறியுள்ளான். இதனையடுத்து புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மேலே சென்று பார்த்தபோது கிஷோர் கருகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் கதறி அழுதனர்.

அதன் பின்னர் படுகாயங்ளுடன் மீட்கபட்ட சிறுவன் கிருத்விக்கை விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News