வளரிளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
வளரிளம் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-03 15:21 GMT
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவிகள்
மயிலாடுதுறையில் உள்ள, ஸ்ரீ காஞ்சி சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் பாதுகாப்பு, விழிப்புணர்வு ,கருத்தரங்கு நடைபெற்றது. சி சி சி சமுதாய கல்லூரி, பள்ளி நிர்வாகம், இணைந்து நடத்திய, கருத்தரங்கில், சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட நன்னடத்தை அலுவலர் வெங்கட்ராமன்,காமேஸ்வரன், உள்ளிட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
சிறப்பு பிரிவு காவல் துறை கண்காணிப்பா ராஜ்குமார், கலந்துகொண்டு, குழந்தை திருமணம் ,போதை பொருள் தடுப்பு சட்டம், அடிப்படை மனித உரிமை, குழந்தைகள் உதவி மையம் குறித்தும், வளர் இளம் பருவத்தில் உள்ள, பள்ளி மாணவர்களுக்கு, எளிதில் புரியும் வகையில் விளக்கமளித்தார்.