குமரி: மழைநீரில் சிறுவர்கள்துள்ளல் ஆட்டம்

சுசீந்திரத்தில் பெய்து வரும் கனமழையில் சிறுவர்கள் துள்ளி குதித்து ஆட்டம் போட்டனர்.

Update: 2024-05-25 13:09 GMT

ஆட்டம் போடும் சிறுவர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த தட்பவெப்பம் நிலவி வருகிறது. அத்துடன் அணைகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதிகபட்சமாக இன்று மயிலாடியில் 103 மிமீ., மழை பெய்தது.      

இதேபோல் பழையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் சுசீந்திரம் பகுதியில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தடிக்காரன்கோணம்-கீரிப்பாறை சாலையில் காமராஜபுரம் பகுதியில் சாலையோரம் நின்ற பழமையான ஆலமரம், மாமரம் ஆகியவை மழையால் சரிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பபட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மேலும், மாவட்டம் முழுவதும் மலையோர கிராமங்கள் மற்றும் சாலையோரங்களில் நின்ற மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் பல இடங்களில் சிறுவர், சிறுமியர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News