மகா காலபைரவர் கோயிலில் பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம்
Update: 2023-11-14 02:16 GMT
பிரத்தியங்கிரா தேவி
அமாவாசையையொட்டி ஜமீன் கூடலூர் மகா காலபைரவர் கோயிலில் பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடந்தது. வேட்டவலம் அடுத்த ஜமீன் கூடலூர் கிராமத்தில் உள்ள மகா கால பைரவர் கோயிலில் நேற்று ஐப்பசி மாத அமாவாசையையொட்டி கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கோயில் நிறுவனர் பரமானந்த சுவாமிகள் காலை 11 மணிக்கு மிளகாய் வற்றல் கொண்டு சிறப்பு நிகும்பலா யாகம், 108 சங்காபிஷேகம், பிரபஞ்ச தியான பயிற்சி ஆகியவற்றை நடத்தினார். பின்னர் மதியம் 2 மணியளவில் பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு பால்,பன்னீர்,சந்தனம், இளநீர், கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பிரத்தியங்கிரா தேவி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்ப ட்டது.