ஓசூர் ஸ்ரீ பிரத்தியேங்கிரா தேவி கோயிலில் மிளகாய் வத்தல் யாகம்

ஓசூர் ஸ்ரீ பிரத்தியேங்கிரா தேவி கோயிலில் மார்கழி மாத பவுர்ணமியை நடைபெற்ற முன்னிட்டு மிளகாய் வத்தல் யாகத்தில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சமை தரிசனம் செய்தனர்

Update: 2023-12-27 09:26 GMT
 ஓசூர் அருகே உள்ள மோரணப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியேங்கிரா தேவி கோவிலில் இன்று மார்கழி மாத பௌர்ணமி திருநாள் மற்றும் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் உள்ள ஸ்ரீராகு ஸ்ரீகேது மற்றும் மூலவர் ஸ்ரீபிரத்தியேங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.அதனைத்தொடர்ந்து மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு கோயிலில் குண்டத்தில் மிளகாய் வத்தல் போட்டு வழிபடும் சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த சிறப்பு யாகத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று பில்லி, சூனியம், கெடுதல் நீங்க யாக குண்டத்தில் மிளகாய் வத்தல் போட்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News