சிலம்பம் போட்டி பரிசளிப்பு விழா
எலவனாசூர்கோட்டையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-06 09:20 GMT
சிலம்பம் போட்டி பரிசளிப்பு விழா
எலவனாசூர்கோட்டையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. தமிழ் வீர கலை பயிலகம் மற்றும் கள்ளக்குறிச்சி சிலம்பம் ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, சிலம்பம் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மணிக்கண்ணன் எம். எல்.ஏ., ஊராட்சி தலைவர் நந்தகுமார், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். போட்டிகளில் 20 மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட சிலம்பம் கழக வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், ஒன்றிய கவுன்சிலர் சர்தார், மனோகர், துணைத் தலைவர் ஷம்ஷாத் உட்பட பலர் பங்கேற்றனர்.