திரவுபதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
கள்ளகுறிச்சி மாவட்டம், வீரபாண்டி திரவுபதி அம்மன் கோவில் சித்திரை வசந்த விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
Update: 2024-04-15 06:28 GMT
அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் பழமையான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா நேற்று காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி மாலை கோவில் வளாகத்தில் பாரத சொற்பொழிவு நடக்கிறது. வரும் 21ம் தேதி முதல் நாள் விழா துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 26ம் தேதி திரவுபதி சமேத அர்ஜூனன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 28ம் தேதி இரவு கரகம் மற்றும் பக்தர்களால் சுமந்து செல்லக்கூடிய மிக உயரமான தேர்பவனியும் 21ம் தேதி தேர் நிலையை அடைந்தவுடன், தீமிதி திருவிழா நடக்கிறது. மே 1ம் தேதி பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.