ஆத்தூர்: அருள்மிகு ஸ்ரீ புத்துமாரியம்மன் கோவில் பூமிதித்திருவிழா

ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில்உள்ள அருள்மிகு ஸ்ரீபுத்து மாரியம்மன் கோவில் சித்திரை பூமிதித் திருவிழாவில் 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-04-25 04:35 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்னி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புத்துமாரியம்மன் திருக்கோவிலில் பதினெட்டாம் ஆண்டு சித்திரை தீமிதி திருவிழா நிகழ்ச்சி கடந்த 16ஆம் தேதி கணபதி ஹோமம் அம்மனுக்கு பூச்சாட்டுகள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கினி சட்டி, பூங்கரகம் எடுத்து வந்து மேளதாளங்கள் வானவேடிக்கை முழங்க முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மன் கோவில் பூசாரி தலைமையில் சுமந்தவாறு ஓம் சக்தி பராசக்தி சக்தி என கோசமிட்ட வாறு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் ஒன்றன், பின் ஒருவராக தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Tags:    

Similar News