சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் 7ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா இன்று நடந்தது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம்பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.இதன் காரணமாக இக்கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அம்மனை தரிசனம் செய்வதற்காக தினமும் கார், வேன்,பேருந்து போன்ற வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அனைவரும் போற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழாவை இந்த ஆண்டு வெகு சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் பணிகள் துவங்குவதற்கான பந்தக் கால் நடும் விழா இன்று நடைபெற்றது.சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்ற இந்த விழாவை தொடர்ந்து சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 7 ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றம் நடைபெறுகிறது.