சோழீஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்மணி சிறப்பு பூஜைகள்

சங்ககிரி:அரசிராமணி சோழீஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்மணி சிறப்பு பூஜைகள்

Update: 2024-04-23 17:26 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணியில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமர் சோழீஸ்வரர் கோயில் சித்ரா பௌணர்மியையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சித்ரா பௌணர்மியையொட்டி அருள்மிகு பெரியநாயகியம்மன் உடனமர் சோழீஸ்வரர் சுவாமிக்கு பால், தயிர், திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News