ஸ்தலசயன பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் நடைப்பெற்ற சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-18 17:03 GMT
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா

மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்றது ஸ்தலசயன பெருமாள் கோவில். 108 வைணவ திவ்விய தேச கோவில்களில், 63-வதாகவும், நில தோஷ பரிகாரத்திற்கும் சிறப்பு பெற்றது. இக்கோவிலில் நடந்த திருப்பணிகள் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக, சித்திரை பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்கள் நடத்தவில்லை. மஹா கும்பாபிஷேகம், கடந்த பிப்., 1=ம் தேதி நடந்ததைத் தொடர்ந்து, மீண்டும் உற்சவங்கள் துவக்கப்பட்டன.

சித்திரை பிரம்மோற்சவம், கொடியேற்றி துவக்கப்பட்டது. காலை 3:30 மணிக்கு நடைதிறந்து, நித்ய பூஜைநடத்தினர். பின், அலங்கார சுவாமி, தேவியருடன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அவர் முன்னிலையில், நாலாயிர திவ்விய பிரபந்த, முதல் திருவந்தாதி பாடல்கள் பாடி, ஆகம வேத மந்திரங்கள் முழங்கி, பேரி தாளம் இசைத்து, தேவர்கள், தேவதைகளை வரவேற்று, 5:40 மணிக்கு கொடியேற்றினர்.

தொடர்ந்து, சக்கரத்தாழ்வார் நவசந்தி பூஜை நடத்தி, சுவாமி கோவிலிலிருந்து புறப்பட்டு, வீதியுலா சென்றார். இரவு கிருஷ்ணர் அலங்கார சுவாமி, ஊஞ்சல் சேவையாற்றினார். பக்தர்கள்தரிசித்து வழிபட்டனர். ஐந்தாம் நாள் உற்சவமாக, வரும் 21-ம் தேதி கருடசேவை, ஏழாம் நாள் உற்சவமாக, வரும் 23-ம் தேதி திருத்தேரில் சுவாமி உலா ஆகியவை, முக்கிய உற்சவங்களாக நடக்கின்றன.

Tags:    

Similar News