சித்திரை பொங்கல் திருவிழா

மதுரை அவனியாபுரம் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் அலகுகுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-05-06 15:25 GMT
மதுரை அவனியாபுரம் பிள்ளையார்பாளையம் பெரியமாரியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் விழா கொடியோற்றத்துடன் தொடங்கியது முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தீபராதனைகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி இது விமர்சியாக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காப்புகட்டி விரதம் இருந்து கோவிலில் இருந்து பால்குடம் எடுத்தும் 16அடி அலகுகுத்தியும் அக்கினிசட்டி ஏந்தியும், அய்யனார் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவில் வரை மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் அவனியாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அன்று இரவு கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளைகோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
Tags:    

Similar News