சிறந்த பள்ளி மேலாண்மை குழுவாக தேர்வு - குவியும் பாராட்டு

மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சிறந்த பள்ளி மேலாண்மை குழுவாக தேர்வு செய்யப்பட்டதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2024-01-24 11:15 GMT

சான்றிதழ் 

நாமக்கல் மருத்துவகல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்விதுறையின் சார்பில் நடந்த விழாவில், மல்லசமுத்திரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சிறந்த பள்ளிமேலாண்மை குழுவாக தேர்வு செய்யப்பட்டு, கலெக்டரால் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கம், பள்ளிமேலாண்மைகுழு தலைவர் கலாமணியிடம் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை, பெற்றோர் ஆசிரியர்கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News