கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
சங்ககிரி கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்;
By : King 24x7 Website
Update: 2023-12-24 16:46 GMT
சங்ககிரி கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
சேலம் மாவட்டம் சங்ககிரி நகர்ப்பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சிறப்பு திருப்பளி பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றது. சங்ககிரி நகர்பகுதியில் உள்ள புனித அந்தோணியர் ஆலயம், சிஎஸ்ஐ உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலய வளாகங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக்கவசம் புனித அந்தோணியர் ஆலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் மரத்துடன் கூடிய குடில்கள் அமைக்கப்பட்டு , கிறிஸ்தவர்கள் புத்தாடைகளை அணிந்து குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.