அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே வாண்டயம்பட்டி குண்டும் குழியுமான சாலையை அப்புறப்படுத்தி புதிய தார் சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Update: 2023-11-17 15:05 GMT

முற்றுகை போராட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலூக வாண்டயம்பட்டி கிராமத்தில் 150கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பத்து வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட குண்டும் குழியுமான தார் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சாலையால் அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் குண்டும் குழியுமான சாலையில் தடுக்கி விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய சேர்மேனிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100கும் மேற்பட்ட பொதுமக்கள் குண்டும் குழியுமான சாலையை அப்புறப்படுத்தி புதிய தார் சாலை அமைத்து தரக்கோரி கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் இராமசாமி காவல் ஆய்வாளர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரியின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

Tags:    

Similar News