காவிரி குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

மண்ணச்சநல்லூர் அருகே பெரமங்கலம் கிராமத்தில் காவிரி குடிநீர் கேட்டு திருச்சி துறையூர் சாலையில் பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2024-04-11 08:15 GMT

மண்ணச்சநல்லூர் அருகே பெரமங்கலம் கிராமத்தில் காவிரி குடிநீர் கேட்டு திருச்சி துறையூர் சாலையில் பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெரமங்கலம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக காவிரி குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீருக்காக மக்கள் அவதி அடைந்து வந்தனர் .இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி துறையூர் சாலையில் உள்ள பெரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த புலிவலம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி பரமசிவம் பெரமங்கலம் கவுன்சிலர் ராசாத்தி கலைவாணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காவிரி குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை யடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News