பால்நல்லுார் வழியே மாநகர பஸ் இயக்கம்

தடம் எண்: 583என் பேருந்தினை பால்நல்லுார் வழியில் இயக்கும் விழா.

Update: 2024-03-10 18:19 GMT

பஸ் இயக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பால்நல்லுார் ஊராட்சியில் 1,000த்துக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கிருந்து, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், தாம்பரம் பகுதிகளுக்கு செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், வேலைக்கு செல்வோர் மற்றும் அப்பகுதியினர் என அனைத்து தரப்பினரும், 5 கி.மீ., துாரம் உள்ள வல்லம் மற்றும் தெரசபுரம் சென்று, அங்கிருந்து ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட பகுதிளுக்கு சென்று வந்தனர். எனவே, தாம்பரம் -- ஸ்ரீபெரும்புதுார் வழித்தடத்தில் செல்லும் மாநகர பேருந்தில் ஒன்றை, பால்நல்லுார் வழியே இயக்க வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் தாம்பரம் மாநகர டிப்போ அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று தடம் எண்: 583என் பேருந்தினை பால்நல்லுார் வழியில் இயக்கும் விழா நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி பேருந்தினை கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் தாம்பரம் மாநகர பேருந்து மண்டல மேலாளர் தாமஸ் பால்நல்லுார் ஊராட்சி தலைவர் நேரு மாநகர பேருந்து அதிகாரிகள உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News