தென்காசியில் நாய் கருத்தடை மைய பணியை நகர மன்ற தலைவர் ஆய்வு
தென்காசி நகராட்சி பகுதிகளில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியினை நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-02-25 09:04 GMT
தென்காசி நகராட்சி பகுதிகளில் ஏராளமான நாய்கள் பொதுமக்களை தொடர்ந்து தாக்கி வருவதால் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய கருத்தடை சாதனங்களுடன் அதிகாரிகள் வந்தன. அதனை தென்காசி நகர் மன்ற தலைவர் தென்காசி நகர திமுக செயலாளர் சாதிர் மற்றும் பொது சுகாதார பிரிவு அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு விரைந்து வேலைகள் நடைபெற ஆலோசனை கூறினர்.
இதனால் அந்த பகுதியை சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைகளை ஏற்று நாய்களைப் பிடிக்கும் பணி நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.