அம்பேத்கர் படம் குறித்து நகரமன்ற உறுப்பினர் விசாரணை
ஆத்தூர் நகராட்சி அலுவலக பின் பகுதியில் அம்பேத்கர் படம் குப்பைகளுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்ததை குறித்து அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது.;
Update: 2024-03-08 12:11 GMT
ஆத்தூர் நகராட்சி அலுவலக பின் பகுதியில் அம்பேத்கர் படம் குப்பைகளுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்ததை குறித்து அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலக பின்பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படம் குப்பை மற்றும் மது பாட்டில் நடுவே வைத்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து நகர மன்ற உறுப்பினர் தேவேந்திரன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகள் இடம் நேரடி விசாரணை மேற்கொண்டார். அப்போது சுகாதார அலுவலக மேசை மீது படம் எடுத்து வைத்திருந்தனர் .