சீர்மிகு நகரத் திட்ட பணிகள் - நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு.
திருப்பூர் மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-02-05 06:55 GMT
ஆய்வு
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு திருப்பூர் மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் டவுன்ஹாலில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநாட்டு அரங்கின் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், தலைமை செயல் பொறியாளர் லட்சுமணன்,துணை ஆணையாளர் சுல்தானா துணை மாநகர பொறியாளர்கள் கண்ணன், செல்வநாயகம், கோவிந்த பிரபாகர், மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.