திமுக வேட்பாளருக்கு நகர செயலாளர் ஓட்டு சேகரிப்பு
கள்ளக்குறிச்சி நகராட்சியை மாநகராட்சியாக்கிட தி.மு.க., வேட்பாளர் மலையரசனுக்கு ஓட்டளிக்க வேண்டும் என நகர செயலாளர் சுப்ராயலு பிரசாரம் செய்தார்.;
Update: 2024-04-07 07:58 GMT
வாக்கு சேகரிப்பு
கள்ளக்குறிச்சி நகர பகுதிகளில் நகர செயலாளர் சுப்ராயலு தலைமையில் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. நகர செயலாளர் சுப்ராயலு தலைமையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள், நகர பிரமுகர்கள் ஓட்டு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
கச்சிராயபாளையம் சாலையில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் நகர செயலாளர் பேசுகையில், 'கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசனுக்கு ஓட்டு போட்டால், கள்ளக்குறிச்சி நகராட்சி விரைவில் மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்வு பெறும். நகர பகுதியில் ரிங் ரோடு திட்டம், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.