செய்யாரில் பாஜக நிகழ்ச்சிக்காக நகர் முழுவதும் அலங்காரம்
செய்யாறு நகரில் பாஜக நிகழ்ச்சிக்காக நகர் முழுவதும் கொடி பேனர்கள் வாழை மரங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-05 15:12 GMT
நகர் முழுவதும் கட்டப்பட்டுள்ள பாஜக கொடிகள்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் என் மண் என் மக்கள் நடைபயண நிகழ்ச்சிக்காக அனக்காவூர் பகுதியில் இருந்து அரசு கலைக் கல்லூரி வரை இருபுறமும் பாஜக கொடி வரவேற்பு பேனர்கள், வாழை மரங்களால் அலங்காரம் செய்து தோரணங்கள் ஆகியவற்றால் அலங்கரித்து வைக்கபட்டுள்ளது.
மேலும் நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் வரவேற்பு போஸ்டர்கள் வழி நெடுக ஓட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அலங்கரித்து வைத்துள்ளனர்.