கேரள கழிவுகளுடன் வந்த வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்

முஞ்சிரை அருகே கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு டெம்போக்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

Update: 2024-04-13 13:31 GMT

பறிமுதல் செய்யப்பட்ட லாரி

கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் விளாத்துறை முதல் நிலை ஊராட்சி உள்ளது. இந்தஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாராயபுரம் கோயிக்காவிளை கிராமம் உள்ளது. இந்த கிராமம் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்காது.

இதை பயன்படுத்தி கடந்த சில மாதமாக இப்பகுதியில் மர்ம நபர்கள் வாகனங்களில் மருத்துவ மற்றும் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வந்தனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீச துவங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவரிடம் புகார் தெரிவித்தனர் அவர் கொடுத்த அறிவுரையின்படி பொதுமக்கள் அப்பகுதியில் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடு பட்டனர். இந்நிலையில், வழக்கம் போல் கேரள கழிவுகளை அப்பகுதியில் கொட்டுவதற்காக இரு டெம்போக்கள் வந்தன.

இதை கவனித்த மக்கள் ஊராட்சி தலைவர் ஓமனாவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் புதுக்கடை ஸ்டேஷன் மற்றும் சுகாதாரத்துறைஅதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ 'இடம் வந்தார். அவரது தலைமையில் துணை தலைவர் சிவகுமார் மற்றும் பொதுமக்கள் வாகனங்களை சிறை பிடித்தனர். பின்னர் கொட்டிய கழிவுகளை, அந்த வாகனங்களிலேயே ஏற்றி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News