சிட்பண்ட் நிறுவனத்தை சூறையாடிய பொதுமக்கள்

Update: 2023-11-10 09:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் செயல்பட்டு வந்த பிரபல ஏ பி ஆர் சிட் பண்ட் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி சிட்பண்ட்ஸ் பொதுமக்களிடம் வசூல் செய்தது இந்நிறுவனம் பல்வேறு மாவட்டங்களில் கிளை பரப்பி ஆயிரக்கணக்கான மக்களிடம் தீபாவளி சிட் பண்ட் வசூல் செய்தது கடந்த சில மாதங்களாகவே தீபாவளி சிட் பண்ட் கட்டிய நபர்களுக்கு முறையாக பொருட்கள் வழங்க வில்லை என கூறப்படுகிறது.

இதனால் நிறுவனத்தின் முன்பு மக்கள் கூட்டம் கூடி தங்களுக்கான பொருள்களை கேட்டு பெற்று வந்தனர். ஆனாலும் காலம் தாழ்த்தி முறையாக வழங்கவில்லை என கூறப்படுகிறது தீபாவளி நெருங்கும் நேரத்தில் தீபாவளி சிட்பண்ட் கட்டிய நபர்களுக்கு பொருட்கள் வழங்குவதில் தாமதம் அடைந்ததால் சீட் பண்ட் கட்டிய நபர்கள் செய்யாறு புதிய காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஏ பி ஆர் சிட் பண்ட் கடை மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஆகியவற்றை சூரையாடினர். சாலையில் மறியலில் ஈடுபட்டனர் நிறுவனத்தில் உள்ள சோபா, ஏசி, உள்ளிட்ட பொருட்களை சூரையாடிச் சென்றனர்.

Tags:    

Similar News