ஜல்லிக்கட்டில் மோதல் 2 பேர் கைது
சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டிஅருகே ஜல்லிக்கட்டில் மோதல். தொழிலாளியை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது . மேலும் தலைமறைவாக உள்ள 4பேரை போலிசார் தேடி வருகின்றனர்.
Update: 2024-01-19 07:15 GMT
சேலம் மாவட்டம் தம்மம்பட்டிஅருகே, ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட மோதலில், தொழிலாளியை கத்தியால் சரமாரியாக வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளியில், நேற்று முன்தினம் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் செந்தாரப்பட்டி 5வது வார்டு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சுரேந்தர்பாபு(29), இவர்களது கிரிக்கெட் அணியினர், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கிரிக்கெட் அணியினரும் கலந்து கொண்டனர். அவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் அப்போது காளைகளை பிடிப்பதில் இரு அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், அவர்கள் அங்கிருந்து சென்றனர். சுரேந்தர்பாபு தனியாக டூவீலரில் செந்தாரப்பட்டி காந்தி சிலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை ஜேம்ஸ் (29), சுபாஷ் (25), விக்னேஷ்(22), சுரேஷ்(35), அர்ஜூன் (25), மணி உள்ளிட்ட 6 பேர் கடுமையாக தாக்கினர். மேலும், ஜேம்ஸ் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சுரேந்தர்பாபுவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், வழக்குப்பதிவு செய்து, விக்னேஷ், சுரேஷ் ஆகியோரை கைதுசெய்தார். பின்னர் அவர்களை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில்அடைத்தனர்.மேலும், தலைமறைவாக உள்ள 4பேரை தேடி வருகின்றனர்.