இருதரப்பினரிடையே கோஷ்டி மோதல் - 8 பேர் மீது வழக்கு பதிவு.

மணலிக்கரை அருகே இரு தரப்பினரிடைய ஏற்பட்ட கோஷ்டி மோதல் சம்பவத்தில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-30 05:54 GMT

காவல் நிலையம் 

கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரை புத்தூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இதே ஊரை சேர்ந்தவர் மனோகரன். இவர் பேரூராட்சிக்கு சொந்தமான சாலை பகுதியை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவர் கட்டியதாக தெரிகிறது. இந்த விஷயத்தை ரவிச்சந்திரன் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று ரவிச்சந்திரன், ராஜி, அஜி மோன், ரவி, எழில் மற்றும் கண்டால் தெரியும் இரண்டு பேர் உட்பட எட்டு பேர் இரண்டு கோஷ்டிகளாக சம்பவ இடத்தில் நின்று மாறி மாறி தகாத வார்த்தைகளால் பேசி, தகராறில் ஈடுபட்டு அடித்துக் கொண்டனர். இந்த சம்பவத்தில் ரவிச்சந்திரன் மற்றும் மனோகரன் ஆகிய இருவரும் பலத்த படுகாயம் அடைந்தனர். ரவிச்சந்திரனும், மனோகரனும் மாறிமாறி கொற்றிக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். ரவிச்சந்திரன் கொடுத்த புகார் மனு அடிப்ப டையில் மனோகரன், ஜெரின் மில்கர், கண் டால் தெரியும் இரண்டு பேர், மனோகரன் கொடுத்த புகார் மனு அடிப்படையில் ராஜி, அஜிமோன், ரவி, எழில் உட்பட மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.கோஷ்டி மோதலில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் மற்றும் மனோகரனை போலீ சார் தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News