பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 2 ஆம் தேதி தொடங்கும்

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 2 ஆம் தேதி தமிழ் பாடத் தேர்வில் தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

Update: 2024-05-11 15:49 GMT

கோப்பு படம் 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மே பதினொன்றாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை வழங்கப்படுகின்றன. மாவட்ட கல்வி அலுவலகத்தில் செய்முறை தேர்விற்கு விண்ணப்பம் பெறுவதற்கான ஒப்புகைச் சீட்டினை 125 ரூபாய் பணம் கட்டி பெற்று கொள்ள வேண்டும்.

துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் ஜூன் மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதி கட்டணம் 500 ரூபாய்.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 2 ஆம் தேதி தமிழ் மற்றும் மொழிப்பாட தேர்வு நடைபெறும். ஜூலை 3, 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறும். ஜூலை 6 ஆம் தேதி மாற்று பாடத் தேர்வும். ஜூலை 8 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.

Tags:    

Similar News