5ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அருகே ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி 5ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி.

Update: 2024-03-10 16:03 GMT

பலி 

திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பலியானன். திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அருகே சமுத்திராபட்டியைச் சேர்ந்தவர் வீரமணிகண்டன். இவர் மகன் கதிர்வேல் (வயது 11). இவர் சீலப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அழகம்மாள் அவரது மகன் கதிர்வேல் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் எதிரே ராசாகுளத்தில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குளத்தில் மூழ்கிய மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
Tags:    

Similar News