பாலத்திலிருந்து காவிரி அற்றங்கரையோரம் பாய்ந்த சரக்கு வாகனம் பாய்ந்ததில் கிளீனர் பலி
குமாரபாளையம் பாலத்திலிருந்து காவிரி அற்றங்கரையோரம் பாய்ந்த சரக்கு வாகனம் பாய்ந்ததில் கிளீனர் பலியானார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-13 05:22 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பாலத்திலிருந்து காவிரி அற்றங்கரையோரம் பாய்ந்த சரக்கு வாகனம் பாய்ந்ததில் கிளீனர் பலியானார். திருப்பத்தூரில் இருந்து கோவை நோக்கி பொலீரோ சரக்கு வாகனம் ஒன்று, நேற்று அதிகாலை 04:30 மணியளவில் குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை, காவிரி பாலம் வழியாக சென்ற போது, ஓட்டுனர் கட்டுப்பாட்டை மீறி, பக்கவாட்டு தடுப்புகளை, உடைத்துக்கொண்டு காவிரி ஆற்றின் கரையோரம் பாய்ந்து விழுந்தது. இதில் வந்த இருவர் படுகாயமடைந்த நிலையில், குமாரபாளையம் தீயணைப்பு படையினர் மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், திருப்பத்தூரில் இருந்து கோவை நோக்கி பொலீரோ சரக்கு வாகனத்தில், ஆரஞ்சு பழங்கள் லோடு ஏற்றிக்கொண்டு, கோவைக்கு சென்றதாகவும், வாகனத்தை திருப்பத்தூர், சின்னகசிநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவசங்கர், 20, என்பவர் ஓட்டியதும், அதே பகுதியை சேர்ந்த மாது, 50, என்பவர் மகன் ரிஷி, 19, கிளீனராக உடன் வந்ததும் தெரியவந்தது. சிகிச்சைக்காக வந்த ரிஷி, காலை 06:30 மணியளவில் வரும் வழியில் இறந்தார் என டாக்டர்கள் கூறினர். இது குறித்து இவரது தந்தை மாதுவிற்கு தகவல் தெரிவிக்க, நேரில் வந்த மாது, சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரிஷியின் உடலை பார்த்து அழுதார். மேலும் விபத்தை ஏற்படுத்தி, தன் மகன் இறப்புக்கு காரணமான சிவசங்கர் மீது நடவடிக்கை எடுக்க, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.