பள்ளிகளில் நடைபெற்ற தூய்மை பணிகள் குறித்து ஆய்வு

நாகை மாவட்டம் தேவூர், கீழ்வேளூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்று  வரும் தூய்மை பணிகளை  தமிழக முறை சாரா  மற்றும் இளையோர் கல்வித்திட்ட  இயக்குனரும், நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான முத்து பழனிசாமி  ஆய்வு செய்தார்.

Update: 2024-01-12 02:28 GMT

பள்ளிகளில் நடைபெற்ற தூய்மை பணிகள் குறித்து ஆய்வு

பள்ளி கல்வித்துறை சார்பில்  மாநிலம் முழுவதும் 3 நாட்கள் அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளி வளாகம் மற்றும் உள்கட்டமைப்புகளை  தூய்மை பணி  மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி நாகை மாவட்டம் தேவூர், கீழ்வேளூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்று  வரும் தூய்மை பணிகளை  தமிழக முறை சாரா  மற்றும் இளையோர் கல்வித்திட்ட  இயக்குனரும், நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான முத்து பழனிசாமி  ஆய்வு செய்தார். அப்போது  பள்ளிகளில்  நடைபெற்று வரும் தூய்மை பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் ஆசிரியர்களிடம்  பள்ளிகளில் படிக்கும்  10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களின் இந்த கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிப்பது,   மாலை நேரங்களில் மாணவர்களுக்கு தனித்திறன் வகுப்புகள் எடுப்பது , பள்ளிகளில்  மாணவர்களுக்கு  ஐந்து வருடத்திற்கு உள்ள  வினாத்தாள்களை  கொடுத்து அவர்களை தேர்வுக்கு தயார் செய்து தேர்ச்சி பெற வழிவகை   மேற்கொள்ள வேண்டும்.நாகை மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதற்கு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முழுமையாக  பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.  ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர்கள்  ஜீயெஸ் , ஞானசேகரன்   ஆசிரியர்கள்  உடன் இருந்தனர்.

Tags:    

Similar News