சேலத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று அம்மாபேட்டை போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2024-04-27 03:55 GMT

சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று அம்மாபேட்டை போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.


சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று அம்மாபேட்டை போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். உடனே அங்கிருந்த போலீசார், தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்ேபாது தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:- சேலம் மாநகராட்சி 35-வது வார்டுக்குட்பட்ட பட்டனநாயக்கர் காடு தெருவில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் முருகேசன், நாகலட்சுமி ஈடுபட்டனா். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் 2 பேரையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி உள்ளார். இது குறித்து கேட்க சென்ற தூய்மை பணி மேற்பார்வையாளர் மூர்த்தியையும் தாக்கினார். எனவே தூய்மை பணியாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தி கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி நடந்த சம்பவம் குறித்து புகார் அளிக்குமாறு கூறினர். அதன்பேரில் தூய்மை பணி மேற்பார்வையாளர் மூர்த்தி, தூய்மை பணியாளர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்து உள்ளார். இதனால் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News