புள்ளியியல் துறை அலுவலகம் சார்பில் தூய்மை பணிகள்

ஜாகீர்அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று புள்ளியியல் துறை அலுவலகம் சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Update: 2024-06-22 02:53 GMT

ஜாகீர்அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று புள்ளியியல் துறை அலுவலகம் சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


சேலம் புள்ளியியல் துறை துணை மண்டல அலுவலகம் சார்பில் ஆண்டுதோறும் மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் ஒரு அரசு பள்ளியை தேர்ந்தெடுத்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்தாண்டு ஜாகீர்அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று புள்ளியியல் துறை அலுவலகம் சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பாளர் ராஜகோபால் தலைமையில் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு பள்ளி வளாகம், மைதானம் முழுவதும் சுத்தம் செய்து தூய்மை படுத்தினர்.

இதனை தொடர்ந்து பள்ளிக்கு தேவையான ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வாலி, குப்பை தொட்டி உள்ளிட்ட தூய்மை உபகரணங்களை அலுவலக கண்காணிப்பாளர் ராஜகோபால், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சிவசங்கரிடம் வழங்கினார். மேலும், பள்ளி, வீடு, பொது இடங்களில் தூய்மையை கடைபிடிப்பேன் என்றும், வாழ்வில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பள்ளி மாணவ, மாணவிகளும், புள்ளியியல் துறை அலுவலக ஊழியர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், புள்ளியியல் துறை அலுவலக ஊழியர்கள், பள்ளி ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News