விருதுநகரில் காலநிலை மாற்றம் இயக்க கருத்தரங்கு

காலநிலை மாற்றம் இயக்கம் தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-11-21 14:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், காலநிலை மாற்றம் இயக்கம் தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி துணை இயக்குநர் திலீப்குமார், முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. 2050 ஆம் ஆண்டில் 4-இல் 3 பங்கு மக்கள் நகரங்கள் மற்றும் நகரங்கள் ஒட்டி பகுதிகளில் தான் வசிப்பார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நகரத்தின் மீது அவற்றின் இயற்கை வளங்களின் மீது நாம் தரக்கூடிய அழுத்தம் என்பது மிக அதிகமாக இருக்கின்றது. இட நெருக்கடி, சுற்றுச்சூழல், தனிமனித சுகாதாரத்தை ஒட்டி வரக்கூடிய பிரச்சினைகள் அதிகமாகும். மேலும், வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்தியாவில் நகரமயவாவதில் முன்னிலையில் இருப்பது தமிழ்நாடு தான். அனைத்து துறைகளும் வரும் காலங்களில் எந்த ஒரு பணிகள் செய்தாலும் காலநிலை மாற்றத்தை ஒட்டியே நடவடிக்கைகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வது வேண்டிய சூழலில் நாம் வந்திருக்கின்றோம். கட்டடத்துறை மூலம் எங்கு கட்டிடம் கட்டினாலும் மின்சார பயன்பாட்டை குறைவாக உபயோகப்படுத்த கூடிய அளவிற்கு இயற்கை ஒலியையும் காற்றையும் காற்றோட்டத்தையும் பெறக்கூடிய அளவிற்கு அந்த கட்டிடங்கள் இருக்கின்றதா என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்ற நிலை இனிமேல் வரக்கூடிய காலங்களில் செய்ய வேண்டி இருக்கும். பள்ளி குழந்தைகளுக்கு பாடத்திட்டங்களில் இருந்து சுற்றுச்சூழல் தொடர்பான புரிதல்கள் ஏற்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் என்பது மரம் நடுவது மட்டுமல்ல. மின்சாரம், மற்ற பயன்பாடுகளை எந்த அளவுக்கு குறைத்து இருக்கின்றோம். நம் அன்றாட செயல்பாடுகளில் காலநிலை மாற்றம் குறித்து நாம் செய்யும் சாதாரண விஷயங்களையும், புரிந்து கொண்டு செயல்பட கூடியதாக எதிர்காலம் மாறும்.காலநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தில் இருந்து வெப்பம் அதிகமாக வருவதால் பலத்த காற்றுடன் வெப்ப சலனம் மழை அதிகமாக உள்ளது. சில இடங்களில் பருவமழை பொய்த்து தண்ணீருக்காக அதிக நேரம் செலவிட வேண்டிய நிலையும் உள்ளது. இந்த பிரச்சனைகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், நம் அடுத்த சந்ததிகளுக்கு இது மிகவும் பெரிய பிரச்சனைகளை உண்டாக்க வழி வகுத்திடும்.

இனி வரும் காலங்களில் ஒவ்வொரு நடவடிக்கைகளையும், பருவநிலை மாற்றம் சார்ந்த தொடர்பான தத்துவத்தை உள்ளடக்கி இருக்க வேண்டிய தேவை இன்று தொடங்கி இருக்கின்றது. இந்தியா போன்ற அதிகமான மக்கள் தொகை வாழக்கூடிய நாடுகளில் இது குறித்து அதிகமாக பேசுவதற்கும், சிந்திப்பதற்கும் மிக முக்கியமான தேவை இருக்கிறது. இதை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற கருத்தரங்குகள் நடைபெறுகிறது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News