மக்களுடன் முதல்வர் முகாம்

குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் நான்கு நாள் முகாம் நேற்று துவங்கியது.

Update: 2023-12-19 15:41 GMT

குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் நான்கு நாள் முகாம் நேற்று துவங்கியது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் நான்கு நாள் முகாம் நேற்று துவங்கியது. மாநிலம் முழுதும் மக்களின் முதல்வர் திட்ட முகாம் துவங்கி நடந்து வருகிறது. குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் துவங்கிய முகாமில், நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, முகாமினை துவக்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, எரிசக்தி துறை மற்றும் மின்சார வாரியம்,  வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, வீட்டுவசதி துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். திருநங்கைகள் தங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். தாசில்தார் சண்முகவேல், ஒ.ஏ.பி. தாசில்தார் தங்கம், ஆர்.ஐ., வி.ஏ.ஒ.க்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். டிச. 21ல் ஜே.கே.கே. நடராஜ மண்டபம், டிச. 26ல் சுந்தரம் திருமண மண்டபம், டிச. 27ல் ராஜேஸ்வரி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.
Tags:    

Similar News