சேலம் விமான நிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு

தர்மபுரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலம் விமான நிலையம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2024-03-12 07:07 GMT

முதல்வரை வரவேற்ற ஆட்சியர் 

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 993 முடிவுற்ற திட்டப்பணிகளின் திறப்பு மற்றும் ரூ.114.19 கோடியில் 75 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா தர்மபுரி அரசு கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சேலம் வந்தார்.

காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பிருந்தாதேவி புத்தகம் வழங்கி முதல்-அமைச்சரை வரவேற்றார்.

மேலும், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.அருண், மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து வெளியே காரில் வந்த அவருக்கு வழிநெடுகிலும் நின்றிருந்த தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News