மக்களுடன் முதல்வர் திட்டம் - முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை இரண்டாம் கட்டமாக 130 ஊராட்சி கிராமங்களில் நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு அரசின் சார்பில் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் “மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தினை அறிவிப்பு செய்துள்ளார். அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு, அனைத்து ஊராட்சிகளில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளைப் பெற சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, “மக்களுடன் முதல்வர்“(நகர்ப்புறம்) திட்டம் முதற்கட்டமாக தேனி மாவட்டத்தில் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 18.12.2024 முதல் 30.12.2024 வரை 10 நாட்களில் 60 முகாம்கள் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் (ஊரகம்), முகாம் தேனி மாவட்டத்தில் ஜுலை மாதம் இரண்டாம் வாரத்தில் 5 ஊராட்சிகளுக்கு ஒரு முகாம் வீதம் 30 நாட்களில் 30 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது 15 துறைகளில் வழங்கப்படும் சேவைகளின் விபரங்கள். 1.மின்சாரத்துறை புதிய மின் இணைப்புகள், விகிதப்பட்டி மாற்றங்கள், பெயர் மாற்றம், மின்பளு கட்டணங்கள் போன்ற சேவைகளும். 2.வருவாய் துறை பட்டா மாறுதல், உட்பிரிவு, நில அளவை விண்ணப்பங்கள்,இணையவழி பட்டா, இணையவழி பெயர் மாற்றம்,வாரிசு சான்று, சாதிச் சான்று மற்றும் பிற சான்றிதழ்கள், ஓய்வூதிய திட்டங்கள் போன்ற சேவைகளும். 3.ஊரக வளர்ச்சித் துறை வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, கட்டிட வரைபட அனுமதி,TNWDC மூலம் கடன்கள், திடக்கழிவு மேலாண்மை, வணிக உரிமம் வழங்குதல் போன்ற சேவைகளும்.
4.கூட்டுறவுகள் மற்றும் உணவு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் வழங்குதல் போன்ற சேவைகளும் 5.வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை திட்ட ஒப்புதல், நில வகைப்பாடு மாற்றம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்(TNUHDB) மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குதல், வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீட்டு உரிமையாளருக்கான ஆவணம் வழங்குதல் போன்ற சேவைகளும். 6.காவல்துறை பொருளாதார குற்ற புகார்கள், நில அபகரிப்பு, மோசடி புகார், POCSO மற்றும் பிற புகார்கள் போன்ற சேவைகளும்.
7.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (NIDC)/ மத்திய அரசின் தனித்துவமான அடையாள அட்டை(UDID), பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள்,NHFDC சுய வேலைவாய்ப்பு வங்கி கடன்கள் போன்ற சேவைகளும் 8.சமூக நலத்துறை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித் திட்டம் (புதுமைப்பெண் திட்டம்), பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கான வளர்ப்பு பராமரிப்புத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் போன்ற சேவைகளும். 9.சுகாதாரத்துறை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளை சேர்த்தல்
10.வேளாண்மைத்துறை நுன்னீர்பாசனம், கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வேளாண்மைத்திட்டம், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான நீர் ஆதார திட்டம், சிறுதானிய திட்டம், மாடித்தோட்டம் அமைத்தல், வேளாண் இயந்திரங்களை குறைந்த விலையில் இ-வாடகை மூலம் வழங்குதல் 11.கால்நடைபராமரிப்புத்துறை மீன் வளர்ப்பு திட்டங்கள், ஆடு, கோழி, பண்ணை அமைத்தல் 12.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, வீட்டு மனை இணையவழி ( E-பட்டா), தாட்கோ கடன் போன்ற சேவைகளும்.
13.பிற்படுத்தப்பட்டோர் மட்டும் சிறுபான்மை நலத்துறை தொழில் கடன் மற்றும் கல்விக் கடன்கள்,TAMCO -தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்,TABCEDCO-தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரப்பினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்லூரிக் கல்வி உதவித்தொகை போன்ற சேவைகளும். 14. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம்(MSME) (மாவட்ட தொழில் மையம் (DIC)) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்(NEEDS ), பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்(PMEGP), வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் திட்டம்(UYEGP), பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குழு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்(PMFME), போன்ற சேவைகளும். 15.தொழிலாளர் நல வாரியம் தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்கள் போன்ற சேவைகள் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. இம்முகாம் தொடர்பாக அனைத்துத் துறை பணியாளர்களும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.