கெங்கவல்லியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

கெங்கவல்லியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 310 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2023-12-24 01:04 GMT
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லியில் மக்கள் உடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு கெங்கவல்லி பேரூராட்சித் தலைவர் லோகாம்பாள் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார்.முகாமை மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கனேஷ்ராம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திமுக நகர திமுக செயலாளர் சு.பாலமுருகன்,பேரூராட்சி துணைத் தலைவர் மருதம்பாள், கவுன்சிலர்கள் முனைவர் தங்கபாண்டியன், சையது, கவிதாசேகர் ஹம்சவர்தினி குமார், முருகேசன் சத்தியா செந்தில், அமுதா கிருஷ்ணமூர்த்தி, கலியம்மாள், வகிதாபானு முஜிபுர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.முகாமில் காவல்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, எரிசக்தி துறை, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊடக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட 13 வகையான துறைகள் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.இதில் மொத்தம் 310 மனுக்கள் பெறப்பட்டன.

Tags:    

Similar News